மேலும் செய்திகள்
திருமுக்கூடல் அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை
25-Oct-2024
உத்திரமேரூர் :உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், 250 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், மாணவர்களுக்கென ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சிறிய அளவிலான கழிப்பறை கட்டடம் பழுதடைந்தது. பின், மாணவ - மாணவியருக்கு தனித்தனியாக கட்டட வசதி ஏற்படுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 5.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி துவங்கியது. ஆறு மாதங்களுக்கு முன் பணி நிறைவு பெற்றது. எனினும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் கழிப்பறை கட்டடம் வீணாகி வருகிறது. இதனால், மாணவ - மாணவியர் பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. எனவே, திருமுக்கூடல் அரசு உயர்நிலை பள்ளியில், புதிதாக கட்டிய கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உத்திரமேரூர் பி.டி.ஓ., லோகநாதன் கூறியதாவது:பணி முடிந்த சில கட்டடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. ஒன்றியத்தின் பல பகுதிகளில் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ள புதிய கட்டடங்கள், அடுத்த சில நாட்களில் திறப்பு விழா நடைபெறும். அப்போது, பள்ளி கழிப்பறை கட்டடமும் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
25-Oct-2024