உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் கட்டி வைக்கும் மாடுகள் மாயமாகும் பரிதாபம்

சாலையோரம் கட்டி வைக்கும் மாடுகள் மாயமாகும் பரிதாபம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர், ஒழையூர், களியனுார், நத்தப்பேட்டை, மதுரா மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் பிரதானமாக உள்ளது.மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் ஆடுகளை பட்டியில் அடைத்து விடுகின்றனர். அதேபோல, மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் மாடுகளையும் வீடுகளின் அருகே இருக்கும் கொட்டகை மற்றும் சாலையோரங்களில் கட்டி வைக்கின்றனர்.நள்ளிரவு நேரம் பார்த்து சிறிய அளவிலான லோடு வாகனங்களின் வாயிலாக மாடுகளை திருடிச் சென்று விடுகின்றனர். இதுபோன்ற மாடுகளை, உள்ளூர் சந்தையை தவிர்த்து வெளியூர் சந்தைகளில் விற்று கணிசமான வருவாயை திருடர்கள் பார்க்கின்றனர்.மாடு காணவில்லை என, காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும், யார் மீது சந்தேகம் இருக்கிறதா என, கேட்கின்றனர். அந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை இல்லை.சமீபத்தில், காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் - காஞ்சிபுரம் சாலையோரம் படுத்திருக்கும் ஐந்திற்கும் மேற்பட்ட மாடுகளை மர்ம நபர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் கடத்தி சென்று விட்டனர்.கால்நடை வளர்ப்போர், மாடுகளை ஊர் ஊராக தேடியது தான் மிச்சமாக இருக்கிறது. எனவே, ஆடு, மாடு திருட்டுகளையும் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை