சென்னக்குப்பம் ஊராட்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம் சென்னக்குப்பம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில், சென்னக்குப்பம் ஊராட்சி தலைவர் பி.பாண்டியன் தலைமை தாங்கி, கழக கொடியேற்றி, ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.அதன்பின், கழக தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், குன்றத்துார் ஒன்றிய நிர்வாகிகள், சென்னக்குப்பம் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.