உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆற்பாக்கத்தில் நகை திருட்டு 3 வீடுகளில் கொள்ளை முயற்சி

ஆற்பாக்கத்தில் நகை திருட்டு 3 வீடுகளில் கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கத்தில், ஒரு வீட்டில் நகை திருடிய மர்ம நபர்கள், அதே கிராமத்தில் மேலும் 3 வீடுகளில் திருட முயன்று, நகை, பணம் இல்லாததால் அங்கிருந்து தப்பி சென்றனர். காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், பால் வியாபாரி. இவரது மகன் நிர்மல், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தார். எதிர் வீட்டில் தங்கியிருந்த செங்குட்டுவன், மகன் வீடு திறந்திருப்பதை நேற்று, காலை 9:00 மணிக்கு பார்த்துள்ளார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, அறைகளில் இருந்த பீரோவில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, மாகரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இதில், ஒரு சவரன் நகை மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதே தெருவில் வசிக்கும் பாலாஜி, ராஜாராம் என, மூன்று வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த வீடுகளில் நகை, பணம் இல்லாததால், மர்ம நபர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி