உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறுகிய கால மகசூலுக்கு ஜிங்குனியா கலப்பின சவுக்கு

குறுகிய கால மகசூலுக்கு ஜிங்குனியா கலப்பின சவுக்கு

ஜி ங்குனியா கலப்பின சவுக்கு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி விவசாயி எம்.சசிரேகா கூறியதாவது: மகளிர் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மூலமாக, ஜிங்குனியா கலப்பின சவுக்கு மரங்களை சாகுபடி செய்து உள்ளோம். வழக்கமான சவுக்கு மரங்கள், சாகுபடி செய்த ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரும். இடைப்பட்ட காலங்களில், உரமிடத் தேவையில்லை. நீர் பாசனம் மற்றும் பராமரிப்பு செய்தால் போதும். சவுக்கு சாகுபடியில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும். ஆனால், ஜிங்குனியா கலப்பின சவுக்கு மரங்கள், மூன்று ஆண்டுகளிலேயே மகசூல் தரக்கூடிய ரகமாகும். நாட்டு ரக சவுக்கு மரங்கள் சாகுபடி செய்வதை காட்டிலும், ஜிங்குனியா கலப்பின சவுக்கு மரங்களை சாகுபடி செய்யும் போது, கணிச மான வருவாய் ஈட்ட வழிவகுக்கும். நாட்டு சவுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். அதுவே, ஜிங்குனியா கலப்பின சவுக்கு மரங்களை கூடுதலாக ஒரு ஆண்டு விட்டால், ஆறு ஆண்டுகளில் இருமுறை அறுவடை செய்யலாம். விவசாயிகளுக்கும் இரட்டிப்பு வருவாய் பெற வழி வகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - எம்.சசிரேகா, 76395 11941.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை