உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  களக்காட்டூர் சாலை பேட்ச் ஒர்க் வேலை துவக்கம்

 களக்காட்டூர் சாலை பேட்ச் ஒர்க் வேலை துவக்கம்

களக்காட்டூர்: மழைக்கு சேதம் அடைந்த களக்காட்டூர் சாலையை, 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கி உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் வாகனங்கள் களக்காட்டூர் சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், 'டிட்வா' புயலால் பெய்த மழை காரணமாக, களக்காட்டூர் சாலை ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை சார்பில், களக்காட்டூரில் சேதமடைந்த சாலையில், ரெடிமேட் தார் கலவை பயன்படுத்தி, 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. சுற்றியுள்ள சாலைகளின் சீரமைப்பு பணிகள் ஓரிரு நாள் முடியும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி