உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி;நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளால் இடையூறு

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளால் இடையூறு

நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளால் இடையூறு

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம்உள்ள இந்த சாலையில், வஞ்சுவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, காரணித்தாங்கள், பனப்பாக்கம்உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்காக சாலையில் விடுகின்றனர்.அவை, போக்குவரத்திற்கு இடையூறாக, பேருந்து நிறுத்தம் அருகே, சாலையில் நிற்கிறது. திடீரென சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், பேருந்து நிறுத்தத்தின் அருகே கூட்டமாக நிற்கும் மாடுகளால், பள்ளி கல்லுாரிமாணவ -- மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரும் அவதி அடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில், சாலையில் உலவும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் அடைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.- த.பாஸ்கரன்,கூழாங்கல்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ