/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சி புகார் பெட்டி மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவும், வி.என்.பெருமாள் தெருவும் இணையும் இடத்தில், சாலை வளைவு பகுதியில், மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. கால்வாயில் சென்ற மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், சாலையின் அகலம் குறைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை வளைவில் திரும்பும்போது சாலையோர பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, திருவள்ளுவர் தெரு - வி.என்.பெருமாள் தெரு இணையும் இடத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார்,காஞ்சிபுரம்.