உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

வேகத்தடை அறிவிப்பு பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் கா ஞ்சிபுரம், உத்திரமேரூர் செல்லும் வாகன ஓட்டிகள், கீழ்பேரமநல்லுாரில் இருந்து வேடல் கூட்டு சாலை வழியாக சென்று வருகின்றனர். கூட்டு சாலை என்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேகத்தடை அமைக்கப்பட்டு, அதை அடையாளப்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள் வேகத்தடை குறியீட்டு பலகையை மறைத்துள்ளன. இதனால், கீழ்பேரமநல்லுாரில் இருந்து வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, வேகத்தடை குறியீட்டு பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ராமசந்திரன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை