உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறை

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறை

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறை கா ஞ்சிபுரம் காலுார் ஊராட்சி, பெரியாநத்தம் கிராமம் பொன்னியம்மன் கோவில் எதிரில், பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் வசதிக்காக, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 7.85 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடிந்து 10 மாதங்களாகியும் கழிப்பறை திறக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.தாமோதரன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை