உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்படுத்த முடியாத நிலையில் காஞ்சி மாநகராட்சி பூங்கா

பயன்படுத்த முடியாத நிலையில் காஞ்சி மாநகராட்சி பூங்கா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, குருசாமி நகரில் 2016 - 17ல, ' அம்ரூத்' திட்டத்தின் கீழ், 43.91 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு அழகிய செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான சீசா, ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், இரவில் ஒளிரும் மின்விளக்கு, நடைபயிற்சிக்கான சிமென்ட் கல் பதித்த நடைபாதை, அழகிய புல் தரை, அமர்வதற்கான இருக்கைகள் என, பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டது.பூங்காவை குருசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா முழுதும் ஆங்காங்கே செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன. செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ஊஞ்சல், சீசா, சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பழுதுடைந்துள்ளன.மேலும், பூங்காவில் புதருக்குள் பாம்பு, தேள், விஷ வண்டு உள்ளிட்டவை தஞ்சமடைந்துள்ளதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. லட்சகணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, குருசாமி நகர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை