உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பழனி முருகன் கல்யாண உத்சவம்

காஞ்சி பழனி முருகன் கல்யாண உத்சவம்

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி தெய்வானை திருக்கல்யாண உத்சவம் நடந்தது. பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழனி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலிலில் 16ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 21ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது. இதில், ஆறாம் நாள் விழாவான கடந்த 26ம் தேதி மூலவர் பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், 108 பால்குட ஊர்வலமும், 27ம் தேதி இரவு, சூரசம்ஹாரமும் விமரிசையாக நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு முருக பெருமான், தெய்வானை திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானையருடன், முருகப் பெருமான் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ