மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
4 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
4 hour(s) ago
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் இரு லோக்சபா தொகுதிகளில், எம்.பி., நிதியில் 231 வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன. பணிகளை தேர்தலுக்கு முன் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் உறுதியளித்து உள்ளனர். காஞ்சிபுரம் தனித் தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நிதி ஒதுக்கீடு
ஸ்ரீபெரும்புதுார் பொது தொகுதியில், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஆண்டுதோறும் தலா, 5 கோடி ரூபாய் மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.லோக்சபா உறுப்பினர்களும் தங்களின் எம்.பி.,தொகுதியில் பலவித வளர்ச்சிகளுக்கு, சட்டசபை தொகுதிக்கு ஏற்ப நிதியை பிரித்தளிக்கின்றனர். இந்த நிதியை, அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர், சம்பந்தப்பபட்ட கலெக்டர்களிடம் ஒப்புதல் பெற்று, பணிகளை செய்து வருகின்றனர்.கடந்த 2020 - 21 மற்றும் 2021 - 22ம் ஆண்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் தலா, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு, அந்தந்த எம்.பி.,க்கள் நிதி ஒதுக்கீடு செய்தனர்.கடந்த 2022- - 23 நிதி ஆண்டு முதல், எம்.பி., தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், இரண்டு நிதி ஆண்டுகளுக்கு, 290 பணிகள் செய்வதற்கு, 9.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், 143 பணிகள் நிறைவு பெற்றுள்ளன; மீதி, 147 பணிகள் நிலுவையில் உள்ளன.அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், இரு ஆண்டுகளுக்கு 112 பணிகள் செய்வதற்கு, 9.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இவற்றில், 28 பணிகள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டு உள்ளன; மீதம், 84 பணிகள் நிலுவையில் உள்ளன. 30 சதவீத பணி
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு லோக்சபா தொகுதிகளில், இரு நிதி ஆண்டிலும் 402 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில், 231 பணிகள் நிலுவையில் உள்ளனகாஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், எம்.பி.,நிதியில் ஒதுக்கீடு செய்த பணிகளுக்கு, 50 சதவீதபணிகளும். ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், எம்.பி., நிதியில் 30 சதவீத பணிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.ஒவ்வொரு நிதி ஆண்டிற்கு ஒதுக்கப்படும் பணிகளுக்கு, நிதி ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது, அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு லோக்சபா தொகுதிகளுக்கு, எம்.பி., நிதியில் ஒதுக்கீடு செய்த பணிகள் மார்ச் மாதம் துவங்கி இருக்கும் நிலையில், வளர்ச்சி பணிகள் நிறைவு பெறவில்லை.நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன், எம்.பி., நிதியிலான வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தொகுதி எம்.பி.,க்கள், தங்கள் எம்.பி., நிதியில் பரிந்துரை செய்யப்படும் பணிகளுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று பணிகள் செய்து வருகின்றனர். அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.வளர்ச்சியில் காஞ்சி முதலிடம் எம்.பி., தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை, மத்திய அரசு இரண்டு தவணைகளாக பிரித்து அளிக்கிறது. இருப்பினும், தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை நிலுவையின்றி நிறைவேற்றி வருகிறோம். வளர்ச்சி பணிகள் நிறைவேற்றியதில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி முதல் இடம் வகித்து வருகிறது. தொகுதிகளின் வளர்ச்சி பணிகளை மன நிறைவுடன் செய்துள்ளேன்.- க.செல்வம்,தி.மு.க.,- - எம்.பி., காஞ்சிபுரம்.
4 hour(s) ago
4 hour(s) ago