மேலும் செய்திகள்
1,609 நெசவாளர்களுக்கு ரூ.15.8 கோடி மானிய கடன்
07-May-2025
காஞ்சிபுரம்:தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, கைத்தறி துறையில், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு, அடிப்படை கூலியில், 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என, அமைச்சர் காந்தி அறிவித்திருந்தார்.அடிப்படை கூலியில், 10 சதவீத உயர்வு என்பது, 'வாழ்க்கையை மேம்படுத்த போதுமானதாக இருக்காது' என, நெசவாளர்கள் ஏற்கனவே கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், அறிவிக்கப்பட்ட கூலி உயர்வு, எப்போது வழங்கப்படும் என, கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நெசவாளர்கள், கைத்தறி துறையினரிடையே கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கூலி உயர்வுக்கான அரசாணை ஆகஸ்ட், செப்டம்பர் என, பல மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்படுகிறது.அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், கூலி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும். இதுவரை அரசாணை வெளியிடாததால், ஏற்கனவே வழங்கப்படும் கூலி, நெசவாளர்களுக்கு கணக்கிட்டு வழங்கப்படுகிறது.இதுகுறித்து, கைத்தறி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அரசாணை விரைவில் வெளியாகும். அதற்கான பணிகள் நடக்கின்றன. துறை மேலிடம் அதற்கான பணிகளை கவனித்து வருகிறது' என்றார்.
07-May-2025