காஞ்சிபுரம்:புகார் பெட்டி; சாலையில் தேங்கும் கழிவுநீர்
சாலையில் தேங்கும் கழிவுநீர்
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன் தெரு, திருமேற்றளீஸ்வரர் தெரு சந்திப்பில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சாலையில் வெளியேறிய கழிவுநீர் 500 மீட்டர் நீளத்திற்கு மழைவெள்ளம்போல ஆவாகுட்டை வரை வழிந்தோடி தேங்கி நிற்கிறது.இத்தெருவில் உள்ள மாநகராட்சி வரி வசூல் மைய நுழைவாயில் அருகில் குளம்போல கழிவுநீர் தேங்கியதால், வரி செலுத்த வந்தவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.எனவே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ஜானகிராமன்,காஞ்சிபுரம்.