மேலும் செய்திகள்
சாலையோரம் கோழிக்கழிவு கொட்டி எரிப்பு
19-Apr-2025
காஞ்சிபுரம் - வேலுார் செல்லும் பிரதான சாலையில், காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் கிராமம் உள்ளது. கிராமத்தில் சேகரமாகும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் பட்டு பரிசோதனை அலுவலகம் அருகில் உள்ள காலிமனையில், கொட்டி வருகின்றனர்.குப்பை அதிகளவில் சேரும்போது துாய்மை பணியாளர்கள் எரிக்கின்றனர். குப்பையில் இருந்து வெளியேறும் புகையால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அப்பகுதியினர் கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் மாசடையும் சூழல் உள்ளது.எனவே, காலிமனையில் கொட்டப்படும் குப்பைக்கு துாய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ரவி,சிறுகாவேரிபாக்கம்.
19-Apr-2025