உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை

மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை

உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியினர் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.குறிப்பாக, உத்திரமேரூர் பகுதியினர், வந்தவாசி பகுதிக்கு சென்று, சேத்துபட்டு பேருந்து பிடித்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் மேல்மலையனுாருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பயண நேரம் மற்றும் பணம் விரையமாகிறது.எனவே, உத்திரமேரூரில் இருந்து, நேரடியாக மேல்மலையனுாருக்கு சிறப்பு பேருந்து மற்றும் தினசரி பேருந்து இயக்க வேண்டும். - -டி. அறிவழகன்,திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ