/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மின்வாரியம் சீரமைக்குமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மின்வாரியம் சீரமைக்குமா?
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மின்வாரியம் சீரமைக்குமா?
உத்திரமேரூர் பேரூராட்சி, சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம், தாமரை குளம் உள்ளது. இந்த குளக்கரையை சுற்றிலும், பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நடைபாதை ஓரத்தில் செல்லும் மின் கம்பிகள் கைக்கு எட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், நடைபயிற்சிக்கு வருவோர், கவனகுறைவாக கையை துாக்கும்போது, மின்கம்பியில் உரசி, மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.இதனால் நடைபயிற்சிக்கு செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க, உத்திரமேரூர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.குமார்,உத்திரமேரூர்.