மேலும் செய்திகள்
பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்
10-Apr-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில், 1942ம் ஆண்டு முதல் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, புதிய கட்டடம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், பஞ்சுபேட்டைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இங்கு, வைக்கோல்போர், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டால், நீண்ட நேரம் தீயை அணைக்கும் வகையில், 9,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட ‛வாட்டர் லாரி' எனப்படும் தீயணைப்பு வாகனம் ஒன்றும், சிறிய அளவிலான தீயை அணைக்கும் வகையில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 'வாட்டர் டெண்டர்' எனப்படும் நீர்தாங்கி தீயணைப்பு வாகனம் ஒன்றும் உள்ளது.மேலும், இயற்கை பேரிடர் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அவசர கால மீட்பு வாகனம் ஒன்றும் உள்ளது. இதில், வாகனங்களுக்கு இடையே சிக்கியவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர் என, பல்வேறு விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, 80 வகையான மீட்பு உபகரணங்களுடன்கூடிய வாகனம் ஒன்றும் தயார் நிலையில் உள்ளது.மேலும், மிகவும் குறுகலான தெருக்களில் சென்று தீயை அணைக்கவும், கிணறு, பள்ளங்களில் விழுந்த விலங்குகளை மீட்கவும், குடியிருப்புகளில் புகுந்துவிடும் பாம்பு உள்ளிட்டவற்றை பிடிப்பதற்காக மினி சிறப்பு ஊர்தியும் உள்ளது.காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வாயிலாக, 18.3 மீட்டர் உயரம், அதாவது 60 அடி உயர கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும், தீயை அணைப்பதற்கான தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் வாயிலாகவும், கட்டடத்தின் படிகள் வாயிலாக சென்றும் தீயை அணைக்க முடியும் என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
10-Apr-2025