வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹர ஹர சங்கர ஜெய் ஜெய சங்கர ஜெய் ஜெய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சிபுரம்:காஞ்சி சங்கரமடத்தின், 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று பட்டினபிரவேசம் மேற்கொண்டார். இந்த பட்டினபிரவேசம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்து, இளைய மடாதிபதியை ஆசிர்வதித்தார்.கிழக்கு ராஜ வீதியில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில், பூக்கடை புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினர், இளைய மடாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, பலவித மலர்களை துாவி வரவேற்றனர்.இதேபோல, வழிநெடுகிலும் உள்ள பல்வேறு கோவில்களிலும், இளைய மடாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.வணிகர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள், பட்டு ஜவுளி கடை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பக்தர்கள் சார்பிலும், இளைய மடாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.காமாட்சி அம்மன் கோவிலில் துவங்கி, சன்னிதி தெரு, கிழக்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், காமராஜர் சாலை, காந்தி சாலை, வரதராஜ பெருமாள் கோவில் வழியாக சென்று, தேனம்பாக்கம் சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலை, இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றடைந்தார்.
ஹர ஹர சங்கர ஜெய் ஜெய சங்கர ஜெய் ஜெய சங்கர ஹர ஹர சங்கர