உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கும்பாபிஷேக பத்திரிகையில் தி.மு.க., நிர்வாகிகள் பெயர் காஞ்சி பக்தர்கள் அதிருப்தி

கும்பாபிஷேக பத்திரிகையில் தி.மு.க., நிர்வாகிகள் பெயர் காஞ்சி பக்தர்கள் அதிருப்தி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் கிழக்கு ராஜவீதியில் உள்ளது நகரீஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கான திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 21ம் தேதி, இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் மேலாளர் வஜ்ஜிரவேலு மற்றும் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் பெயரில், அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டிய இந்த அழைப்பிதழில், தி.மு.க., நிர்வாகிகள் பெயரும் இடம் பெற்றிருப்பது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகர தி.மு.க., செயலர் தமிழ்ச்செல்வன், 1வது பகுதி செயலர் திலகர், 18வது வட்ட செயலர் சம்பத் ஆகிய மூன்று தி.மு.க., நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ளது.அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்கள், விதிமுறைப்படி அச்சடிக்கப்பட வேண்டும். ஆனால், தி.மு.க., நிர்வாகிகள் பெயரையும் சேர்த்து அச்சடித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kumar
அக் 19, 2024 06:28

என்ன இது சின்ன பிள்ளை தனமா கேட்கறீங்க . அற நிலைய துறைன்னா என்ன , கழக அமைப்புன்னா என்ன, எல்லாம் ஒண்ணு தானே ? கோவில் சொத்தை கொள்ளை அடிக்கணும் அவ்வளவு தான். கோவில் நிதியில் நடத்துற கல்யாணத்துக்கு அரசுக்கு விளம்பரம் எதுக்கு ? கோவில் நிதில திருமணம் நடக்கும் என்று வாக்குறுதி எப்படி முதல்வர் கொடுக்க முடியும் ? மக்களே, இந்துக்களுக்கு இன்னும் சில கோவில்கள் இருக்கறதே இந்த கழக கண்மணிகள் போடுற பிச்சை தானே? அமைதியா இன்னும் சில வருஷங்கள் நீங்க கோவிலுக்கு போயிட்டு இருங்க . 2026 க்கு முன்னமேயே அல்லது 2026 ஜெயிச்சு வந்த பின்னாலயே இப்ப இருக்கற கோவில் கூட இருக்காம போயிடும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை