உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இயற்கை பாதுகாப்பு தினம் பேரணியில் பங்கேற்ற மழலையர்

இயற்கை பாதுகாப்பு தினம் பேரணியில் பங்கேற்ற மழலையர்

காஞ்சிபுரம்:உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, கிராண்ட் ரோட்டரி சங்கம் சார்பில், மழலையர் பங்கேற்ற பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது. உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த பேரணியை, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்தார். இதில், காஞ்சிபுரம் கிளவுட் ஸ்கூல் ஆஃப் இன்டெலிஜென்ஸ் பள்ளி மழலையர், பெற்றோருடன் பங்கேற்றனர். காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலர் சிவா சிதம்பரம் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, பிள்ளையார் பாளையத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் நிறைவு பெற்றது. இப்பேரணியின் நினைவாக, பூங்காவில் 30க்கும் மேற்பட்ட 6 அடி உயர நிழல் மற்றும் பழ வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது என, மழலைகள் நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி