உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒ.பி.குளம் புது தெருவில் வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி மூலவர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மூலவரும், உற்சவரும் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கண்ணபிரான் கோவிலில் பால்குட ஊர்வலம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத், கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, , பால்குட ஊர்வலம் நடந்தது. வாலாஜாபாத் கண்ணபிரான் கோவிலில், இந்தாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சோத்து கன்னியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கண்ணபிரான் கோவில் வந்தடைந்தனர். அங்கு, மூலவருக்கு பக்தர்கள் தங்களது கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ