உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காக்கநல்லுார் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

காக்கநல்லுார் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் அடுத்த, காக்கநல்லுார் வழி விநாயகர் கோவில் உள்ளது. பழுதடைந்த இக்கோவிலை புனரமைக்கும் பணி மேற்கொள்ள அப்பகுதியினர் தீர்மானித்தனர்.அதன்படி, சில மாதங்களாக கோவில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று காலை மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று, காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சியும், 10:20 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ