உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

செவிலிமேடு : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு,அய்யப்பா நகரில்,அய்யனார் கோவில்வளாகத்தில், நற்றுணை நாதர் சிவன் கோவில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9 ம் தேதி காலை 11:00 மணிக்கு, பந்தக்கால் நடுதல், வேள்வி சாலை அமைத்தல் பணி துவங்கி நடைபெற்றது. கடந்த 14ம் தேதிஇரவு 8:00 மணிக்கு முதற்கால வேள்வி பூஜைநடந்தது. நேற்று முன்தினம்காலை 6:30 மணிக்கு நான்குகால வேள்வி பூஜைநடந்தது.7:30 மணிக்கு புனிதநீர் நிரப்பிய திருக்குடங்கள் புறப்பாடும் தொடர்ந்து, வேத விற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைத்தனர்.தொடர்ந்து மூலவர் நற்றுணை நாதருக்கு சிறப்பு அபிஷேக,அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது.திரளான பக்தர்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ