உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  குன்றத்துார் முருகன் கோவில் காணிக்கை ரூ.64 லட்சம்

 குன்றத்துார் முருகன் கோவில் காணிக்கை ரூ.64 லட்சம்

குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் உண்டியலில் காணிக்கையாக 64 லட்சம் ரூபாய் கிடைத்தது. குன்றத்துார் முருகன் கோவில் மற்றும் இதன் உப கோவில்களான கந்தழீஸ்வரர் கோவில், திருவூரக பெருமாள் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் உள்ள 14 உண்டியல்கள் எண்ணும் பணி, குன்றத்துார் முருகன் கோவில் வளாகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 64.31 லட்சம் ரூபாய் ரொக்கம், 91.5 கிராம் தங்கம், 2,711 கிராம் வெள்ளி பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை