உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.30,000 லஞ்சம் வாங்கிய குன்றத்துார் வி.ஏ.ஓ., கைது

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய குன்றத்துார் வி.ஏ.ஓ., கைது

குன்றத்துார், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., ராபர்ட் ராஜ் கைது செய்யப்பட்டார். குன்றத்துார் அருகே தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிபாரதி. இவர், அதே பகுதியில் உள்ள தன் நிலத்திற்கு பட்டாவிற்காகவும், தன் உறவினர் நிலத்திற்கு பட்டா உட்பிரிவு செய்யவும், இரண்டாம்கட்டளை கிராம நிர்வாக அதிகாரி ராபட்ராஜ், 45, என்பவரை அணுகியுள்ளார். பணியை முடித்து கொடுக்க, ராபர்ட் ராஜ் 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், முன்பணமாக 30,000 ரூபாய் கேட்டுள்ளார். இது குறித்து ரவிபாரதி காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயனம் தடவிய 30,000 ரூபாய் நோட்டுகளை, ரவிபாரதியிடம் கொடுத்து அனுப்பினர். இரண்டாம்கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று சென்ற ரவிபாரதி, வி.ஏ.ஓ., ராபர்ட் ராஜ் இல்லாததால், அவரை மொபைல் போனில் அழைத்துள்ளார். அப்போது, குன்றத்துார் அருகே கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நடந்துக் கொண்டிருந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பணியில் இருந்த ராபர்ட் ராஜ், பணிகளை விட்டு அவசர அவசரமாக இரண்டாம்கட்டளை சென்று பணத்தை வாங்கியுள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ராபர்ட் ராஜை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். இரவு 8:30 மணிவரை வரை விசாரணை மேற்கொண்டனர். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை