உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை

ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை

காஞ்சிபுரம்:இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என, மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும், 10 ரூபாய் நாணயம் செல்லாது என பொய்யான தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது.பல கிராமங்களில் செயல்படும் கடைகளில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்.எனவே, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, 10 ரூபாய் நாணயங்களை, வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி