குழந்தைகளை கொண்டாடுவோம் திருவிழா அரசு பள்ளி மாணவ, மாணவியர் கவுரவிப்பு
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், சங்காராபுரம் கிராமத்தில் குழந்தைகளை கொண்டாடுவோம் திருவிழா, காஞ்சி டிஜிட்டல் குழு சார்பில் நடந்தது.இதையொட்டி, கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடந்தன.மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, பேச்சு போட்டி, பாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கான பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி, சங்காரபுரத்தில் நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாளைய விருட்சம், இளம் பிறை, மாணிக்க மாணவர், இளம் தென்றல் மற்றும் இளம் கவி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார்.அதன்பின், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறியதாவது:மாணவ - மாணவியருக்கு பள்ளி காலம் மிக முக்கியமானது. நல்ல பண்புகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வி உதவியாக உள்ளது.இக்காலகட்டத்தில், மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதோடு, ஒழுக்கம், சுகாதாரம் போன்றவற்றை பள்ளி மற்றும் வீடுகளில் இருந்து துவக்க வேண்டும் என, பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.இதில், பேராசிரியர் பாலசுப்பிரமணியம், லயன்ஸ் மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.