உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களைத் தேடி உங்கள் ஊரில் உத்திரமேரூரில் திட்ட முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் உத்திரமேரூரில் திட்ட முகாம்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நேற்று நடந்தது.கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று, பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். அதில், மருத்துவம்பாடி கிராமத்தில் கூட்டுறவு துறை வாயிலாக நடந்த,, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' சிறப்பு உறுப்பினர் சந்திப்பு முகாமில் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று, ஏழு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 26.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கினார்.பின், மருத்துவம்பாடி ரேசன் கடைக்கு சென்று உணவு பொருட்களின் தரத்தை கேட்டறிந்து, அதே கிராமத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட வைக்கோல் சுற்றும் பேலர் இயந்திரத்தை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.பின், உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில், 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை, விரைந்து முடிக்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இறுதியாக, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ