உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகரம் சீனிவாச பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை

அகரம் சீனிவாச பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி அகரம் கிராமத்தில், பழமையான அலர்மேல் மங்கா நாயகா சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சீரமைப்பு பணி செய்ய அப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, கோவில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, அண்மையில் திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மஹா கும்பிபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை அக்னி பிரதிஷ்டை ஹோமம், மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், தென்னேரி அகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை