மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
06-Mar-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துார் கிராமத்தில் வரசித்தி விநாயகர், பாலஸ்கந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆண்டு மகோத்சவ விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு தீபராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு உற்சவமூர்த்திகள் மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, வரசித்தி விநாயகர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், மாத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
06-Mar-2025