உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உதயநிதி உதவியாளர் எனக்கூறி ஊராட்சி செயலரை மிரட்டியவர் கைது

உதயநிதி உதவியாளர் எனக்கூறி ஊராட்சி செயலரை மிரட்டியவர் கைது

உத்திரமேரூர்: துணை முதல்வர் உதயநிதியின் உதவியாளர் எனக்கூறி, வாடாதவூர் ஊராட்சி செயலரிடம் பணம் கேட்டு மிரட்டியவர், கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி, 48; வாடாதவூர் கிராம ஊராட்சி செயலர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன், சென்னையில் இருந்து மொபைல் போனில் தொடர்புகொண்ட தாமோதரன், 53, என்பவர், தன்னை துணை முதல்வரின் உதவியாளர் என, திருமலைசாமியிடம் அறிமுகமானார். அதை தொடர்ந்து, ஊராட்சிகளுக்கு தேவையான பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து, அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, 10,000 ரூபாய் தனக்கு கொடுக்குமாறு தாமோதரன் கேட்டதாகவும், அதை தர ஊராட்சி செயலர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு, 'துணை முதல்வரின் உதவியாளர் என தெரிந்தும், பணம் தராமல் இருக்கிறாய். நான் பணம் கேட்ட விஷயத்தை யாரிடமாவது சொன்னால், உன்னை கொன்று விடுவேன்' என, நேற்று முன்தினம் திருமலைசாமியை, தாமோதரன் மிரட்டியுள்ளார். இதையடுத்து, திருமலைசாமி உத்திரமேரூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, தாமோதரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி