உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் செக்கடி தெருவைச் சேர்ந்தவர் கந்தன், 38, ஒட்டுநர். நேற்றுமுன்தினம் மாலை, ஸ்ரீபெரும்புதுார், பக்தவச்சலம் நகர், ரேஷன் கடை அருகே உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறினார்.அப்போது, எதிர்பாராத விதமாக மரத்தின் மேலிருந்து தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பிரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை