உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்கூட்டருடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தவர் பலி

ஸ்கூட்டருடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தவர் பலி

குன்றத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், பனங்காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 54. இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியில் இருந்து அரிசி மூட்டை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு டி.வி.எஸ்., ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே வரதராஜபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி