உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்சாலையில் மே.வங்க நபர் பலி

தொழிற்சாலையில் மே.வங்க நபர் பலி

குன்றத்துார்:மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமன், 52. இவர், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலையில் தங்கி பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் இருந்து சுமன் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.குன்றத்துார் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை