உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மண்டலாபிஷேகம் நிறைவு விழா

 மண்டலாபிஷேகம் நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கடஹர ஆஞ்சநேயர் சன்னிதியில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள கார்வண்ண பெருமாள் கோவில் வளாகத்தில் புதிதாக சங்கடஹர ஆஞ்ச நேயர் சன்னிதி கட்டப்பட்டு, கடந்த மாதம் 3ம் தேதி மண்டலாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி காஞ்சி புரம் ஸ்ரீமத் திருவேங்கட ராமானுஜ ஜீயர் பக்த ஜன சபா சார்பில், பிரேம்குமார் பாகவதர் குழுவினரின் ஹரி நாம சங்கீர்த்தனம், ஹரி பக்த சேவை பஜனை உள்ளிட்டவை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை