மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
09-Jul-2025
காஞ்சிபுரம்,:பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக பூஜை பூர்த்தி விழா நடந்தது. காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள செவ்வந்தீஸ்வரர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது. மண்டலாபிஷேக பூஜை நிறைவு நாளான நேற்று, காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மஹா பூர்ணாஹூதியும், மூலவருக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் செவ்வந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
09-Jul-2025