உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வைகாசி விசாக திருவிழாவில் பால்குட ஊர்வலம்

வைகாசி விசாக திருவிழாவில் பால்குட ஊர்வலம்

காஞ்சிபுரம், வைகாசி விசாகத்தையொட்டி, திருத்தணி தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமிக்கு 301 பால்குட ஊர்வலம் நடந்தது.இதில், சங்கரமடத்தில் இருந்து பக்தர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக குமரகோட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகமும், மலர் அலங்காரமும் நடந்தது.காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு பால், தேன், தயிர், இளநீர், கரும்புச்சாறு, ஜவ்வாது, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.காஞ்சிபுரம், செவிலிமேடு, ஜெம் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, நேற்று, காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, 13 அடி உயரமுள்ள பத்துமலை முருக பெருமானுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.உத்திரமேரூரில், குபேர பாலமுருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நேற்று நடந்தது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு நெல், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின், விரதமிருந்த பக்தர்கள் முத்து பிள்ளையார் கோவிலில் இருந்து, பால் குடம் எடுத்துக் கொண்டு குபேர பாலமுருகன் கோவிலுக்கு சென்றனர்.தொடர்ந்து, பக்தர்கள் வரிசையாக நின்றவாறு மூலவருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின், குபேர பாலமுருகன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ