கங்கையம்மன் கோவிலில் பால்குட விழா
வாலாஜாபாத் :வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டையில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 4ம் ஆண்டு பால்குட விழா நேற்று நடந்தது.முன்னதாக, திம்மராஜம்பேட்டை கல்யாண கோட்டி வரதர் கோவிலில் இருந்து, அப்பகுதி முக்கிய வீதிகள் வழியாக பெண் பக்தர்கள் 108 பேர் பால்குடம் சுமந்து, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.பிறகு, கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.