மொபைல் போன் திருடியவர் கைது
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில், அறையில் நுழைந்து இரண்டு மொபைல் போன்களை திருடி சென்றவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.பண்ருட்டி அருகே, பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரபிக், 24. நண்பர்களுடன், ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை, ரபிக் அறையில் தனியாக துாங்கி கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின் எழுந்து பார்த்த போது, அறையில் இருந்த இரண்டு மொபைல் போன்கள் திருடு போனது தெரிந்தது.இதையடுத்து, ரபிக், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, காஞ்சிபுரம் ராமசாமி தெருவைச் சேர்ந்த குமார், 49, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, இரண்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.