போலீஸ் துணை கமிஷனர் பெயரில் போலி கணக்கு துவக்கி பண மோசடி
சென்னை, தாம்பரம் காவல் ஆணையகத்தின் கீழ் உள்ள பள்ளிக்கரணையில் துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:என் புகைப்படத்தை எடுத்து, நானே புதிதாக முகநுாலில் கணக்கு துவக்கியதுபோல் தயாரித்து, என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து, என் நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்டனர். அந்த முகநுால் கணக்கு, சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டு உள்ளது. இதில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த குற்றவாளிகள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. உங்கள் பெயரில் புதிதாக யாரேனும் கணக்கு துவக்கினால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பின், முகநுாலில் என் கணக்கு தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என, 'ஸ்டேட்டஸ்' வைக்கலாம். நண்பர்கள், உறவினர்கள் யாரும் பணம் அனுப்பி ஏமாற மாட்டார்கள். இதுகுறித்து, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.