உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குரங்குகள் தொல்லை கிராமவாசிகள் அவதி

குரங்குகள் தொல்லை கிராமவாசிகள் அவதி

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் வெங்கச்சேரி மற்றும் ஆதவப்பாக்கம் கிராமங்களில், 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போர், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளிலும் பழம் மற்றும் காய் தரக்கூடிய மரங்களையும் வளர்த்து வருகின்றனர்.இப்பகுதியில், கடந்த ஓராண்டாக 150-க்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளன. கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள், அப்பகுதியில் உள்ள காய், கனி தரக்கூடிய மரங்களை சேதப்படுத்தி, வீடுகள், கடைகளில் வைக்கப்பட்டுள்ள தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றன.மேலும், குரங்குகள் மக்களை கடிக்கும் வகையில் அச்சுறுத்தியும், இடையூறு ஏற்படுத்தியும் வருகின்றன. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை