மேலும் செய்திகள்
தடுப்பு இல்லாத குளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
05-Sep-2025
காஞ்சிபுரம்;தடுப்புகள் இல்லாத தரைப்பாலங்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலையை, 448 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையேயான சாலை விரிவாக்கப் பணி, 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதால், இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், சாலையில் உள்ள சிறிய மற்றும் பெரிய தரைப்பாலங்களில் ஓரம் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, சாலை போடும் பணிக்கு இடையூறாக இருந்த பைப்களை தடுப்பாக போட்டுள்ளனர். இந்த பைப்புகள் மீது, வாகனம் மோதி நின்றாலும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் இருக்கும் தரைப்பாலங்களுக்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Sep-2025