உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத தரைப்பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தடுப்பு இல்லாத தரைப்பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்,:குன்றத்துார் ஒன்றியம், காவனுார் ஊராட்சியில் இருந்து, குத்தனுார், மாடம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி செல்லும் பிரதான சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் சென்று வரும் நிலையில், தனியார் பள்ளி வாகனங்கள், அரசு பேருந்து, கனரக வாகனங்கள் ஏராளமாக செல்லும் பிரதான சாலையாக உள்ளது.இந்த சாலையில், காவனுார் ஊராட்சிக்குட்பட்ட திறந்துவெளி கிராமம் வரசித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள தரைப்பாலத்தின் இருப்புறமும் தடுப்பு ஏற்படுத்தவில்லை.இதனால், தரைப்பாலத்தின் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வானங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூடுவாஞ்சேரி சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ