மேலும் செய்திகள்
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால் அச்சம்
05-Aug-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்கும் கலாசாரம் தொடர்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சியில் காஞ்சிபுரம் சாலை, புக்கத்துறை சாலை, எண்டத்துார் சாலை, மானாம்பதி சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இந்த சாலையோரங்களில், அரசியல் கட்சி, ரியல் எஸ்டேட், அரசு துறை ஆகியவை தொடர்பானபேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பயணியர் நிழற்குடைகள், குடவோலை கல்வெட்டு கோவில், தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.
05-Aug-2025