சகதியான சாலையில் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார், -குன்றத்துார் சாலையில் இருந்து பிரிந்து பிள்ளைப்பாக்கம் செல்லும் சாலை, இப் பகுதி மக்களின் பிரதான சாலையாக உள்ளது. தவிர, கடுவஞ்சேரி, குண்டுபெரும்பேடு உள்ளிட்ட கிராம மக்கள், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் உள்ளிட்ட பகுதிளுக்கு நாள்தோறும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர். இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் சாலையில் பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமக உள்ளது. தற்போது, பெய்த மழையால் நடக்கவே லாயக்கற்ற சாலையாக மறியுள்ளது.இருசக்கர வாகனங்களில் செல்வோர் சகதியான சாலையில் பயணிக்க முடியாமல் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.