உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

உத்திரமேரூர்:மதூர் சாலையில், தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.உத்திரமேரூர் தாலுகா, மதூர், சிறுதாமூர், அருங்குன்றம், பட்டா ஆகிய பகுதிகளில் கல் குவாரிகள், கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன.இந்நிலையில், நெல்வாய் -- மதூர் சாலையில் கல் குவாரிகள், கிரஷர்களில் இருந்து ஜல்லி, எம்.சான்ட் மண் ஆகியவை ஏற்றிக் கொண்டு, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு லோடு லாரிகள் செல்கின்றன.அதில், பெரும்பாலான லாரிகள் அதிக அளவில் எம்.சான்ட் ஏற்றியும், தார்ப்பாய் மூடாமலும் வேகமாக சென்று வருகின்றன.இதனால், எம்.சான்ட் மண் லாரியில் இருந்து சிதறி சாலையில் சேகரமாகி வருகிறது. அப்போது, வாகனங்கள் செல்லும்போது, புழுதி பறக்கிறது.தற்போது, மதூர் பகுதியில் செல்லும் சாலையில் அதிக அளவில் புழுதி பறப்பதால், கல் குவாரிகள் சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் புழுதி பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. சாலையில் சிதறியுள்ள மண்ணை முழுதுமாக அகற்றி, தண்ணீர் தெளிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை