உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருச்சக்கரபுரத்தில் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருச்சக்கரபுரத்தில் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருச்சக்கரபுரம் தெரு வழியாக ஆனந்தாபேட்டை, பாக்ரா பேட்டை, ரெட்டிபேட்டை, மின்நகர், திருக்காலிமேடு, ரயில்வே சாலை, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, தலைமை அஞ்சலலகம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.இதனால், மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, திருச்சக்கரபுரம் தெருவில், சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ