உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடம் சாலையோரம் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஒரகடம் சாலையோரம் மண் குவியல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, சாலையோரம் குவிந்துள்ள மண் திட்டுகளால் டூ - வீலர் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வாலாஜாபாத் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் - - வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியே, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர் பல்வேறு வாகனங்களில் தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் பராமரிப்பு இல்லாமல், பல இடங்களில் மண் குவிந்து உள்ளது. இதனால், டூ - வீலர் வாகன ஓட்டிகள், சாலையோரம் செல்லும் போது, மண் குவியலால், விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, கனரக வாகனங்கள் செல்லும் போது, மண் துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், கண் பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரங்களில் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !